புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்புகளை ஆய்வு செய்ய ஐஐடி குழு; அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை ஐஐடி நிபுணர் குழுவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பழுதடைந்ததால், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதையடுத்து ரூ.250 கோடியில் 1,900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XE3r77
via
No comments