மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயிலுக்கு நிலக்கரியால் இயங்கும் நீராவி இன்ஜின் முதல்முறையாக உள்நாட்டில் வடிவமைப்பு: தெற்கு ரயில்வே பொறியாளர்கள் தகவல்
மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேஇயக்கப்படும் மலை ரயிலுக்கு, முதல்முறையாக உள்நாட்டு தயாரிப்பில் நிலக்கரியால் இயங்கக்கூடிய நீராவி இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்பட்டுவரும் நீராவி மலை ரயில் சேவை, 112 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. இந்த நீராவி ரயில் சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, நிலக்கரியை கொண்டு எரியூட்டப்பட்டு நீராவியால் இயக்கப்பட்டு வந்தது. மலைரயிலில் பயணிக்கும்போது, உதகையின் இயற்கை எழிலையும், வன விலங்குகளையும், மலைமுகடுகளையும் கண்டு ரசிக்க முடியும். இதனால், இதில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வம் காட்டுவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sRRdU3
via
No comments