இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய விவகாரம்- கைதான இடைத்தரகரின் கூட்டாளிகளிடம் சென்னையில் 4-வது நாளாக விசாரணை

இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர லஞ்சம், தொழிலதிபருக்கு ஜாமீன் பெற்று தர தொழிலதிபரின் மனைவியிடம் லஞ்சம்உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இடைத்தரகர் சுகாஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லிதிஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மோசடி புகாரின்பேரில் சுகேஷின் காதலி லீனா மரியாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி குற்றப்பிரிவில் சுகேஷ் மீது ஏராளமான மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விசாரணையில், சுகேஷ் சந்திரசேகரின் நெருங்கிய கூட்டாளிகளான கமலேஷ் கோத்தாரி, அருண் முத்து, சாமுவேல் மற்றும்மோகன்ராஜ் ஆகிய 4 பேரையும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 4பேருமே சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால், 4 பேரையும் சென்னைக்கு அழைத்து டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XaNVzP
via
No comments