Breaking News

வாணியம்பாடியில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கொலை: காஞ்சிபுரம் அருகே இருவர் கைது; 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிப்பு

வாணியம்பாடியில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கொலை வழக்கில் 2 பேரை காவல் துறையினர் கைது செய்து, தலைமறை வாக உள்ளவர்களை தேடி வருகின் றனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வாணியம்பாடியில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வசீம் அக்ரம்(42). மனிதநேய ஜனநாயக கட்சியில் மாநில பொறுப்பில் இருந்த இவர், வாணியம்பாடி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜீவா நகர் பகுதியில் உள்ள மசூதியில் தொழுகையை முடித்து விட்டு இரவு 7 மணிக்கு அவ் வழியாக வந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள் வசீம் அக்ரமை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tD7nRl
via

No comments