கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி போட்டி இது.
இந்த தொடரில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது ஆட்டம் சமனில் முடிந்தாலோ தொடரை இந்தியா வெல்லும்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 9 டெஸ்ட் போட்டிகளில் இந்த மைதானத்தில் விளையாடி உள்ளன. அதில் 4 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3laQUjx
via
No comments