விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை புகாரில் சக அதிகாரி கைது
கோவையில் பயிற்சிக்காக வந்த டெல்லியை சேர்ந்த விமானப்படை பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சக அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கோவை ரெட்ஃபீல்ட்ஸ் பகுதியில் விமானப்படை பள்ளி மற்றும் விமானப்படை நிர்வாகவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆக.15-ம் தேதி நிர்வாகவியல் கல்லூரிக்கு, டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி உட்பட 30 பேர் கொண்ட குழுவினர் தங்கி பயிற்சி பெற வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WcQUqK
via
No comments