Breaking News

தாயகம் திரும்பிய பாராலிம்பிக் பதக்க நாயகர்கள்: டெல்லியில் உற்சாக வரவேற்பு

டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை இல்லாத அளவாக டோக்யோவில் அதிக பதக்கங்களை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்கள் போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டி நிறைவடைந்த இந்திய வீரர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.
 
image
ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற சுமித் அன்டில், ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரியா, வட்டு எறிதலில் வெள்ளி வென்ற யோகேஷ் கத்துனியா, உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற சரத்குமார் ஆகியோர் டெல்லி வந்தனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3BHCtKB
via

No comments