Breaking News

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி ரஷ்யாவின் மெத்வதேவ் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஷ்யாவின் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த இந்த போட்டியில் 6-4, 6-4, 6-4 ஆகிய செட்களில் மெத்வதேவ் வெற்றி பெற்றார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று, "காலண்டர் ஸ்லாம்" பட்டம் வெல்லுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் அந்த சாதனை கைநழுவிப் போனது. ஃபெடரர், நடால், ஜோகோவிச் ஆகிய மூவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நிலையில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்று இருவரையும் முந்த வேண்டும் என்ற ஜோகோவிச்சின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனைப்படிக்க: ‘இந்த பிறந்தநாளில் புதிதாக பிறந்தது போல் உள்ளது’ - பிறந்தநாள் விழாவில் வடிவேலு கலகல பேச்சு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3EeCA22
via

No comments