மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு மூலம் அரசு வேலை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக கண்டறியப்பட்டுள்ள 1,095 பணியிடங்களுக்கு, சிறப்பு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
பேரவையில் கேள்வி நேரத்தில் மணப்பாறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ப.அப்துல்சமது பேசும்போது, “மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணியில் 4 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்பட, அவர்களுக்கான பணியிடங்களை முதலில்கண்டறிய வேண்டும். தனியாகமுழுநேர ஆணையம் அமைக்கவேண்டும். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பணியிடங்களை கண்டறிந்துமாற்றுத் திறனாளிகளை நியமிக்க வேண்டும்’’ என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WNA0PK
via
No comments