25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு; தமிழகம் முழுவதும் இன்று 4-ம் கட்ட மெகா முகாம்: 20 ஆயிரம் இடங்களில் நடப்பதாக அமைச்சர் தகவல்
தமிழகத்தில் 4-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம்இடங்களில் இன்று நடைபெறுகிறது. இந்த முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியதடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டு செப்டம்பர் 12-ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும் 19-ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.41 லட்சம் பேருக்கும் 26-ம் தேதி 23 ஆயிரம் இடங்களில் 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l6repD
via
No comments