காஞ்சிபுரம் நெசவாளர்கள் 6 பேருக்கு தேசிய விருது: உயரிய விருதான ‘சந்த் கபீர்’ விருதை ஒருவர் பெறுகிறார்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் 6 பேருக்கு 4 தேசிய விருது கிடைத்துள்ளது. நெசவாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சந்த் கபீர்’ விருதையும் ஒரு நெசவாளர் பெறுகிறார்.
மத்திய அரசு, நெசவாளர்களுக்கு வழங்கும் மிக உயரிய விருது ‘சந்த் கபீர்’ விருதாகும். 2018-ம் ஆண்டுக்கான ‘சந்த் கபீர்’ விருது இந்திய அளவில் 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மேட்டுப்பாளையம் தெருவைச் சேர்ந்த நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி பெயரும் இடம் பெற்றுள்ளது. நிறைய நெசவாளர்களுக்கு பயிற்சி அளித்தது, வழக்கமான சேலைகளுக்கு மாற்றாக 114 வடிவமைப்புகளை சேர்த்து சேலை நெய்தது ஆகிய காரணங்களுக்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Bd9DSv
via
No comments