Breaking News

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 8 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை: புதுச்சேரி மதுவகைகளை வாங்கிக் குவிக்கும் வேட்பாளர்கள்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்றும், மீலாடி நபி பண்டிகையை ஒட்டி 19-ம் தேதியும், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு மாவட்டங்களிலும் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இம்மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சித் தேர்தல் நடைபெறு வதால், முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதி களில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும். 2-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிகளில் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி நள்ளிரவு வரை டாஸ்மாக் மூடப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Ybrn20
via

No comments