Breaking News

நீண்ட நாட்களுக்குப் பின் வீட்டுக்கு வந்த பேரனுடன் விளையாடிய முதல்வர் தாத்தா

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் அண்ணன் ஆதிகேசவன் மகள் வசந்தியை அமைச்சர் நமச்சிவாயம் (பாஜக) திருமணம் செய்துள்ளார். இதனால் அமைச்சர் நமச்சிவாயம், முதல்வர் ரங்கசாமியின் மருமகன் ஆவார். நமச்சிவாயத்தின் மகனான சிவஹரி தனது தாத்தா உறவு முறையில் உள்ள முதல்வர் ரங்கசாமியுடன் எப்போதும் பேசி விளையாடுவது வழக்கம்.

சுமார் 14 ஆண்டுகளுக்குப் பின் வில்லியனூர் மணவெளியில் உள்ள அமைச்சர் நமச்சிவாயம் வீட்டுக்கு அவரது பிறந்தநாளையொட்டி அண்மையில் முதல்வர் ரங்கசாமி சென்றிருந்தார். தாத்தாவை ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று வீட்டை பேரன் சிவஹரி சுற்றிக் காட்டினான். தனது அறைக்கு அழைத்து சென்று விளையாட்டுப் பொருட்களை தாத்தாவிடம் காட்டினான். அப்போது, “இரண்டு ஆண்டுகளாக எங்கேயும் தன்னை அனுப்புவதில்லை” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தான். அதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு நீண்ட நாட்களுக்குப் பின் சிவஹரி அழைத்து வரப்பட்டான். பணியிருந்தாலும் அவனுடன் முதல்வர் ரங்கசாமி விளையாடத் தொடங்கினார். தொடர்ந்து ரங்கசாமியும், அவரது பேரனும் டென்னிஸ் விளையாடி மகிழ்ந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3GwIrRM
via

No comments