மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கர் ஜிவால் வீடு திரும்பினார்

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நேற்று மாலை வீடு திரும்பினார்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கடந்த 14-ம் தேதி மாலை வழக்கம்போல் வேப்பேரியில் உள்ள தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vpf12S
via
No comments