ஆர்யன் கான் வழக்கு: பணம் பறிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சமீர் வான்கடேவே விசாரிப்பார் என அறிவிப்பு!
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இம்மாத தொடக்கத்தில் பிடிபட்டார். அவரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர். ஆர்யனைக் கைது செய்த நாளில் இருந்து சமீர் வான்கடேமீது மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் சமீர் மீதான புகார்கள் குறித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் டெல்லியில் இருந்து மும்பை வந்து விசாரித்து வருகின்றனர். தொடர் புகார்கள் காரணமாக சமீர் வான்கடே ஆர்யன் கான் வழக்கு விசாரணையில் இருந்து நீக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகின.
Also Read: ஆர்யன் கான் பிடிபட்ட போது செல்ஃபி... தலைமறைவாக இருந்த முக்கிய சாட்சி புனேயில் கைது! - அடுத்து என்ன?
இது குறித்து சமீர் வான்கடேயிடம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தலைமை கண்காணிப்பு கமிஷனர் ஞனேஷ்வர் சிங் அளித்த பேட்டியில்,`` சமீர் வான்கடேயிக்கு எதிராக வலுவான ஆதாரம் கிடைக்கும் வரை ஆர்யன் வழக்கை சமீர் வான்கடேதான் கையாளுவார். ஆர்யன் வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். பிரபாகர் தெரிவித்த புகார் குறித்து 5 பேர் கொண்ட கமிட்டி விசாரித்து வருகிறது. இப்புகாரில் சிக்கியிருக்கும் கேபி கொசாவி மற்றும் சாட்சி பிரபாகர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
விசாரணைக்கு ஆஜராகி தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை விசாரணை குழுவிடம் கொடுக்கவேண்டும் என்று இருவரிடமும் மீடியா மூலம் கேட்டுக்கொண்டுள்ளோம். சமீரிடம் நான்கு மணி நேரம் விசாரிக்கப்பட்டது. அவர் பல உண்மைகளை விசாரணைக் குழு முன்பு தாக்கல் செய்திருக்கிறார். தேவைப்பட்டால் கூடுதல் ஆதாரம் மற்றும் ஆவணங்கள் அவரிடம் கேட்கப்படும். நாங்கள் கேட்ட வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்திருக்கிறார். தேவைப்பட்டால் மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்படும். சமீருக்கு எதிராக வலுவான ஆதாரம் கிடைக்கும் வரை போதைப்பொருள் தொடர்பான வழக்கை சமீர் தொடர்ந்து விசாரிப்பார்" என்று தெரிவித்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3BhhBt3
No comments