அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேரும்படி கூறி மிரட்டுவதாக புகார்
அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேரும்படி கூறி மிரட்டுகின்றனர் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக, கரூர் எஸ்பி ப.சுந்தரவேலுவிடம் நேற்று புகார் அளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேரும்படியும், இல்லாவிட்டால் தேர்தல் பணியாற்றக் கூடாது என்றும் கூறி மிரட்டுகின்றனர். தோல்வி பயம் காரணமாக அராஜகம் செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l8fPW1
via
No comments