Breaking News

மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: முழு விவரங்களுடன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமைகள் மைய இயக்குநருமான பி.புகழேந்தி தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தபால் அனுப்புவதற்கான கவர்கள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரிப் பொருட்கள், மருத்துவ உதவிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது போலவும், கைதிகளுக்கு சம்பளம் கொடுத்தது போலவும் போலியாக கணக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக தெரியவந்துள்ளது. உண்மையில் ஆயிரக்கணக்கில் பொருட்களை தயாரித்துவிட்டு லட்சக்கணக்கில் அவற்றை விற்றுள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xiauQC
via

No comments