திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை இரவு கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது: வரும் 19-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படும்
திருவண்ணாமலையில் காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (7-ம் தேதி) இரவு தொடங்குகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. இந்த திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை (7-ம் தேதி)இரவு தொடங்குகிறது. காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மனின் உற்சவம் நடைபெற உள்ளது. பின்னர், 8-ம் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவமும், 9-ம் தேதி வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qck5H9
via
No comments