மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.200 அபராதம் ரத்து

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை மெட்ரோ ரயில்களிலும், மெட்ரோ ரயில்நிலைய வளாகத்திலும் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கும் வகையில், மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஏப். 10-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
இதை எதிர்த்து, சென்னையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qvU4mc
via
No comments