Breaking News

மேத்யூ வேட் அதிரடி; கைநழுவிய வெற்றி - பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா

இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் மற்றும் ரிஸ்வானின் சீரான ஆட்டங்களால் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. 39 ரன்களில் பாபர் ஆசம் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஸமான் ரிஸ்வானுடன் இணைந்து அதிரடியாக ரன்களைச் சேர்த்தார். இருவரும் அரைசதம் விளாச, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, கேப்டன் ஃபின்ச்சின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே இழந்தது. இதையடுத்து வார்னரும், மிட்செல் மார்ஸும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

Image

மார்ஸ் 28 ரன்களில் பெவிலியன் திரும்ப, பின்னர் வந்த ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 49 ரன்கள் சேர்த்திருந்த வார்னர் முக்கிய கட்டத்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த ஸ்டாய்னிஸ் மற்றும் வேட் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி 9 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மேத்யூ வேட் ஹாட்ரிக் சிஸ்கர்களை விளாசி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை வசப்படுத்தினார். நாளை மறுதினம் நடைபெறும் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3F89fWP
via

No comments