Breaking News

புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் 4 முக்கிய ஏரிகளில் இருந்தும் நீர் திரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரி நீர்வரத்து 10,000 கன அடியாக இருக்கிறது. நீர் திறப்பு 2,000 லிருந்து, 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பூண்டி எரி நீர்வரத்து 8,000 கன அடியாக இருக்கிறது. நீர் திறப்பு 5,000 லிருந்து, 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் எரி நீர்வரத்து 5,240 கன அடியாக இருக்கிறது. நீர் திறப்பு விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சோழவரம் ஏரி நீர்வரத்து 3625 கன அடியாக உள்ளது, நீர் திறப்பு 2151 கன அடியாக இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3F8WUBY
via

No comments