நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? - மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
'எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம்' எனத் தெரிவித்துள்ளார் 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
சிம்பு நடிப்பில் உருவான 'மாநாடு' திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒத்திவைப்பதாக நேற்று மாலை அறிவித்தார். பைனான்சியரிடம் பெறப்பட்ட கடனை திரும்ப செலுத்தாததே அதற்கு காரணம். இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி 11 மணி மணியளவில் படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனாலும், அதிகாலை வரை தயாரிப்பாளர் - பைனான்சியர் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. அதனால் திரையரங்குகளுக்கு KDM கிடைக்கப்பெறாததால் 5 மணிக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 8 மணியில் இருந்து திரையிடப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுகுறித்து 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளில் '' எல்லாம் சரியாக இருக்கிறது. ரசிகர்கள் சந்திக்கும் இடையூறுகளுக்கு மன்னிக்கவும். இப்போது இது எங்கள் நேரம். கடவுள் பெரியவர். எனக்காக நின்ற அனைவருக்கும் நன்றி. எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்பராஜ்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DPZnRp
No comments