போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான ‘வேதா நிலையம்’ தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு; சாவியை ஆட்சியர் வழங்கினார்: விரைவில் குடியேற உள்ளதாக தீபா தகவல்
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ இல்லத்தின் சாவி, தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிச.5-ம் தேதி காலமானார். இதையடுத்து, அவர் வாழ்ந்தபோயஸ் தோட்டத்தில் உள்ள வேதாநிலையம் இல்லம் நினைவு இல்லம்ஆக்கப்படும் என்று 2017-ல் அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, வேதா நிலையம் மற்றும் அசையும் சொத்துகளை கையகப்படுத்துவதற்கான அவசர சட்டம் கடந்த ஆண்டு மே 22-ம் தேதிபிறப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டுஜூலை 24-ம் தேதி வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ENklRg
via
No comments