Breaking News

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி: இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து வழங்கும் ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிறு) காலை 10.30 மணிக்கு இணையவழியில் நடைபெறுகிறது.

யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி, எத்தனை ஆண்டுகள் படிக்க வேண்டும், அதற்கான செலவுகள் என ஏராளமான கேள்விகளுடன் தயங்கி நிற்பவர்கள் அதிகம். அவர்களின் தயக்கத்தைப் போக்கி, தெளிவைத் தரும் நோக்கில் ‘ஆளப் பிறந்தோம்’ என்ற நிகழ்ச்சி இன்று (ஞாயிறு) காலை இணைய வழியில் நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GTewBdQzI
via

No comments