Breaking News

21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்; முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்: 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் உள்ள 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைகள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 29,114 அரிசி குடும்பஅட்டைதாரர்கள், 18,946 இலங்கை தமிழர் குடும்பங்கள் என 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, பயனாளி ஒருவருக்கு ரூ.505 மதிப்புள்ள 21 பொருட்கள் வழங்கரூ.1,088 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eLXU3s
via

No comments