Breaking News

ஜன. 9-ம் தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை

சென்னை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜன. 20 வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 9-ம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தைக்கு அன்றைய தினம் விடுமுறை விட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக கோயம்பேடு காய்கறி அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அரசு அறிவுறுத்தல்படி வரும் 9-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்படுகிறது. மேலும், இனிவரும் நாட்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eWsl7t
via

No comments