Breaking News

பிஎஸ்என்எல் பெயரில் போலியாக இணையதளம் தொடங்கி மோசடி: வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி இணையதளத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில், மர்ம நபர்கள் சிலர் https://ift.tt/3qBgTlt என்ற பெயரில் போலியான இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். அதன்மூலம், பொதுமக்களை தொடர்புகொண்டு வீடுகளுக்கு கேபிள் மூலம் இணையதள சேவை வழங்குவதாகக் கூறி ஆன்லைன் மூலம் பணம் வசூலிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற போலி தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3FEGrFb
via

No comments