'விராட் கோலி விரைவில் உடல் நலம் தேறிவிடுவார்' - புஜாரா
விராட் கோலி உடல்நிலை தேறி வருவதாகவும், விரைவில் மீண்டும் உடற்தகுதி பெறுவார் என்றும் புஜாரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் கேப்டன் விராட் கோலிக்கு முதுகுவலி என்பதால், அவருக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை கேஎல் ராகுல் ஏற்றுள்ளார். விராட் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கியுள்ளார். இந்நிலையில், விராட் கோலி உடல்நிலை தேறி வருவதாகவும், விரைவில் மீண்டும் உடற்தகுதி பெறுவார் என்றும் சேதேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புஜாரா கூறுகையில், அதிகாரபூர்வமாக என்னால் எதையும் கூற முடியாது, ஆனால் இப்போது விராட் கோலி குணமடைந்து வருகிறார். அவர் மிக விரைவில் உடல்நிலை தேறி வருவார் என நினைக்கிறேன்'' என்றார்.
ஜனவரி 11 முதல் கேப்டவுனில் நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் விராட் கோலி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கடைசி நேரத்தில் விஹாரி நிதான ஆட்டம் - தென்னாப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் இலக்கு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3zwsNT2
via
No comments