அனுமதி கொடுத்த நீதிமன்றம்: ஜோகோவிச் மீது மீண்டும் சாட்டையை சுழற்றுகிறதா ஆஸ்திரேலிய அரசு?
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனால் பல்வேறு உலக நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. மக்கள் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் இதில் அடங்கும். இந்த நிலையில் வரும் 17-ஆம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆரம்பமாக உள்ளது.
அதில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. ஆனால் டென்னிஸ் விளையாட்டின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச், தனக்கு அதிலிருந்து விலக்கு வேண்டுமென ஆஸ்திரேலிய அரசிடம் கேட்டுக் கொண்டார். அண்மையில் அவருக்கு தொற்று பரவல் ஏற்பட்டதால் விலக்கு வேண்டும் என சொல்லி இருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய அரசு அதற்கு மறுப்பு சொன்னதோடு, விசாவையும் ரத்து செய்தது.
தொடர்ந்து அவர் மெல்பேர்னில் ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டார். பின்னர் தனது தரப்பில் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஜோகோவிச்சுக்கு சாதகமாக வந்துள்ளது.
ஆனால் ஜோகோவிச் விசாவை இரண்டாவது முறையாக ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரஸின் வழக்கறிஞர்கள் சமர்பித்த வாதத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அரசின் கொள்கையின்படி கொரோனா தொற்று தீவிரமாக உள்ள பயணிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர் வழக்கறிஞர்கள். அதற்கான அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது.
இத்தகைய சூழலில் செர்பிய நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் Ivica Dačić, “நீதிபதிகளின் தீர்ப்பு ஜோகோவிச்சுக்கு சாதகமாக வந்திருந்தாலும் அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது” என தனது கவலையை தெரிவித்துள்ளார்.
விசா விவகாரத்தில் வழக்கை வென்ற ஜோகோவிச், “நான் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுவதை எதிர்பார்த்துள்ளேன். அதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். அதில்தான் எனது முழு கவனமும் உள்ளது. மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட ஆவலாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Source : Times of India
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3q8f025
via
No comments