கேப்டவுனில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு டிரம்ஸ் இசை முழங்க உற்சாக வரவேற்பு
கேப்டவுன் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு டிரம்ஸ் இசை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒமைக்ரான் பெருந்தொற்றுக்கு மத்தியில் போட்டிகள் நடைபெறுவதால் தென் ஆப்பிரிக்கா சென்றதிலிருந்து இந்திய வீரர்கள் கடும் பயோ-பபுள் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 11-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. இந்த போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டம் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியினர் நேற்று (சனிக்கிழமை) தனி விமானம் மூலம் கேப்டவுன் வந்தடைந்தனர். அவர்களுக்கு ஹோட்டலில் டிரம்ஸ் இசை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வீடியோவினை பிசிசிஐ தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.
இதையும் படிக்க: சிட்னி டெஸ்டின் 2 இன்னிங்ஸிலும் சதம் விளாசிய கவாஜா: இமாலய இலக்கை விரட்டும் இங்கிலாந்து
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/31JSxiE
via
No comments