தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு; அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி: பேருந்துகள், டாஸ்மாக் கடைகள் இயங்காது
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், மெட்ரோரயில், டாஸ்மாக் கடைகள் இயங்காது.
தமிழகத்தில் கரோனா, ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜன.4-ம் தேதிஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கடந்த 6-ம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர, மற்றஅனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zMXTpW
via
No comments