Breaking News

`தீவிரவாதியை கொன்றுவிட்டோம், உடலை எடுத்துச்செல்லலாம்!’ -பாக்., முகாமுக்கு தகவல் சொன்ன இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் கடந்த சனிக்கிழமை, இந்தியா பாகிஸ்தான் எல்லையில், குப்வாரா என்ற இடத்தில், கட்டுப்பாட்டுக் கோடு தாண்டி ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதியைக் கொன்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளது இந்திய ராணுவம். `இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகளை ஆதரிப்பதன் மூலம் இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியிருக்கிறது பாகிஸ்தான்’ என்று காட்டமாகக் குற்றம் சாட்டியிருக்கிறது இந்திய ராணுவம்.

இதைப்பற்றிப் பேசிய இந்திய ராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் அபிஜித் பெந்தர்கர், `இந்திய எல்லைக்குள் ஊடுருவிய தீவிரவாதியின் பெயர் முஹம்மது ஷாபிர் மாலிக் என்றும் பாகிஸ்தானின் எல்லை நடவடிக்கை குழுவை(border action team) சேர்ந்தவன் என்றும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் அபிஜித் பெந்தர்கர்

மேலும், அவனிடம் இருந்த உடமைகளை ஆராயும்பொழுது, பாகிஸ்தானின் தேசிய அடையாள அட்டையும் , அந்நாட்டில் கொரோனோ தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு அத்தாட்சியாகச் சான்றிதழ்கள் ஆகியவையும் கிடைத்துள்ளன. அவன் பெயர் ஷபீர் என்று பொறிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் ராணுவ உடையில் அவன் இருக்கும் புகைப்படமும் கிடைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு எல்லை கட்டுப்பாட்டு கோடுக்கு அருகே, பாகிஸ்தான் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பகுதிகளிலிருந்து கறுப்பு ஜாக்கெட் மற்றும் பதானி உடை அணிந்து இவன் ஊடுருவ முயல்வது கண்டறியப்பட்டது. கண்டறிந்து சரியாக ஒரு மணி நேரத்தில், அதாவது 4 மணிக்கு அவனை சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம். அவன் உடலோடு, அவனிடமிருந்த ஒரு ஏ.கே47 துப்பாக்கியும் , 7 கிரைனய்டு வெடி குண்டுகளும் , இன்னும் பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும் , ஊடுருவல் முயற்சி நடந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார் ஜெனரல் அபிஜித். மேலும் எதிர் தரப்பில் உள்ள பாகிஸ்தான் முகாமை, ஹாட்லைனில் தொடர்பு கொண்ட இந்திய ராணுவம் கொல்லப்பட்ட நபரின் உடலை பெற்றுச் செல்லுமாறு கூறியிருக்கிறது.

இந்திய துருப்புகள்

இந்த ஊடுருவலுக்கு பின்பற்றப்பட்ட பாதையை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே போல் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதி பயன்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார் இந்திய ராவணுவ அதிகாரியான ரங்கடோரி. இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பதாகக் கூறியுள்ள இந்திய ராணுவத்தின் குற்றச்சாட்டினை மறுத்துள்ளது பாகிஸ்தான்.



from தேசிய செய்திகள் https://ift.tt/3ELRqfx

No comments