செல்வமகள் சேமிப்பு திட்டம்: 26.03 லட்சம் கணக்குகளுடன் தமிழகம் 2-வது இடம்
சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 26.03 லட்சம் கணக்குகள் தொடங்கி தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக, ‘சுகன்யா சம்ரிதி’ எனும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம். குறைந்த சேமிப்புத் தொகை, அதிக வட்டி, கணக்கை முடிக்கும்போது 3 மடங்கு தொகை என பல்வேறு பலன்கள் உள்ளதால், ஏராளமானோர் இத்திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Lxn1MPK
via
No comments