Breaking News

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நகராட்சிகளை விட பேரூராட்சிகளில் அதிகளவில் வாக்குகள் பதிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பென்னாத் தூர், திருவலம், அம்மூர், விளாப்பாக்கம், திமிரி, தக்கோலம், நாட்றாம்பள்ளி, பனப்பாக்கம் போன்ற பேரூராட்சிகளில் 80 சதவீதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆண்களை விட பெண்களே அதிகமாக வாக்களித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் ஒரு சில இடங்களில் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gh2d0BI
via

No comments