Breaking News

ஐபிஎல் 2022: லக்னோ அணியில் மார்க்வுட்டுக்கு மாற்றாக இணைந்த வீரர்

வரும் சனிக்கிழமை அன்று ஆரம்பமாக உள்ளது 15-வது ஐபிஎல் சீசன். இந்நிலையில் காயம் காரணமாக நடப்பு சீசனிலிருந்து விலகியுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட்டுக்கு மாற்றாக ஆண்ட்ரூ டை இணைந்துள்ளார். முழங்கை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்க்வுட் விலகினார். 

ஆஸ்திரேலிய அணி வீரரான ஆண்ட்ரூ டை 32 சர்வதேச டி20 போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடி உள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் அதன் மூலம் 47 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

அவரை 1 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது லக்னோ அணி. கே.எல்.ராகுல் தலைமையிலான அந்த அணி வரும் 28-ஆம் தேதியன்று வான்கடே மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாட உள்ளது. ஐபிஎல் களத்தில் புதிதாக இணைந்துள்ள இரு அணிகளுக்கும் இதுதான் முதல் போட்டியாக அமைகிறது. குஜராத், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்காக அவர் இதற்கு முந்தைய ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/q7lm3FO
via

No comments