Breaking News

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா தொடங்கியது - சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்த சீசனில் லக்னோ, குஜராத் ஆகிய இரு அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றின் 70 ஆட்டங்களும் மகாராஷ்டிராவில் நடத்தப்பட உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியை ரவீந்திர ஜடேஜா கேப்டனாக வழிநடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mUDANEe

No comments