ஆசிய நாடுகளில் தொற்று அதிகரிப்பு; கரோனா விதிகளை 3 மாதம் கடைபிடிக்க வேண்டும்: சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: ஆசிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் கரோனா விதிமுறைகளை 3 மாதங்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அனைத்து கட்டுப்பாடுகளும் ஏற்கெனவே தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் சில கட்டுப்பாடுகள் நீடிக்கிறது.முதல்வர் தலைமையில் உயர்நிலைக் குழு கூடி, தற்போதுள்ள ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FeOIYpH
via
No comments