கடலூர் | 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடுகளை காலி செய்ய அவகாசம் கேட்டு குடியிருப்புவாசிகள் முறையீடு

ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தங்கள்குழந்தைகளுடன் வந்த குடியிருப் புவாசிகள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு மனு அளித்தனர்.
கடலூர் ஆட்சியர் அலுவலகத் தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பண் ருட்டி நகராட்சி களத்துமேடு புதுநகரைச் சேர்ந்த மக்கள் தங்களதுபள்ளிச் செல்லும் குழந்தைகளு டன் வந்திருந்து மனு ஒன்றைஅளித்தனர். அதில், அப்பகுதியில் உள்ள சுமார் 200 வீடுகளுக்கு நகராட்சி சார்பில் அனுப்பிய பதிவுதபாலில், சின்ன ஏரியை ஆக்கிர மித்து வீடு கட்டியிருப்பதாகவும், அதனால் எதிர்வரும் 28-ம் தேதிக்குள் குடியிருப்புகளை காலி செய்யவேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vIEus6F
via
No comments