Breaking News

"ஆரம்பிக்களாங்களா..."- விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளையொட்டி 'விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இந்தப் படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அண்மையில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளை நிறைவு செய்த படக்குழு, போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 14 ஆம் தேதி 'விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ''நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும் "விக்ரம்" உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்'' என நடிகர் கமல் தனது ட்விட்டரில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Wjolf9m

No comments