Breaking News

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்போது சாட்சி விசாரணையை நடத்த உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் தற்போது சாட்சி விசாரணையை நடத்தும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவுக்குள் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்.23 அன்று உள்ளே நுழைந்த கும்பல் காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்து, பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது. இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையதாக கேரளாவைச் சேர்ந்த சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரை போலீஸார் தேடி வந்த நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். சயான் குடும்பத்துடன் சென்ற கார் விபத்துக்குள்ளாகியதில் அவரது மனைவி, குழந்தை ஆகியோர் பலியாகினர். சயான் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3Ks2v6g
via

No comments