Breaking News

"என் மனசுக்கு இதை மட்டும் சொல்லிக்கொண்டேன்” - No.3 வீரர் ஆண்டன்சனை வீழ்த்திய லக்ஷ்யா சென்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பேட்மிண்டன் உலகின் நம்பர் 1 வீரரான விக்டர் ஆக்சல்செனை வீழத்தியிருந்தார் லக்ஷயா சென். ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் அந்த வெற்றியை அவர் பெற்றிருந்தார். இந்த நிலையில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் உலகின் நம்பர் 3 வீரரான ஆண்டர்ஸ் ஆண்டன்சனை வீழ்த்தியுள்ளார். 

image

21-16, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று ஒற்றையர் ஆடவர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் அவர். காலிறுதியில் சீன வீரரை எதிர்கொள்கிறார் அவர். 20 வயதான அவர் அண்மையில் நிறைவடைந்த ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் இறுதியில் தோல்வியை தழுவியிருந்தார். 

“ஒரு கட்டத்தில் ஆட்டம் 16-16 என சமனில் இருந்தது. அப்போது நான் எனக்குள் சொல்லிக் கொன்றது ஒன்றே ஒன்று மட்டும் தான். அவசரப்பட்டு தவறு ஏதும் செய்துவிடக் கூடாது என சொல்லிக் கொண்டேன். அது எங்கள் இருவருக்கும் ஆட்டத்தில் ரொம்பவே முக்கியமான தருணம். நான் எப்படியோ மூன்று புள்ளிகளை பெற்று முன்னேறிவிட்டேன். இது மாதிரியான முதல் நிலை வீரர்களுடன் விளையாடும் போது இழப்பதற்கு ஏதும் இல்லை என துணிந்து மோதி பார்த்திட வேண்டும். வெற்றி கிடைத்தால் அது போனஸ்” என ஆட்டத்திற்கு பிறகு சொல்லியுள்ளார் லக்ஷயா சென். 

மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மற்றும் சாய்னா நேவால் என இருவரும் இரண்டாவது சுற்றோடு வெளியேறியுள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/N5epCT1
via

No comments