Breaking News

புவனேஷ்வர் குமாரின் 19-வது ஓவர்தான் வெற்றியின் தருணமாக அமைந்தது - ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் கருத்து

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி. 194 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை அணி இறுதிக்கட்ட ஓவர்களில் வெற்றியை கோட்டைவிட்டது. நடராஜன் வீசிய 18-வது ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட டிம் டேவிட் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். இது மும்பை அணிக்கு பாதகமாக அமைந்தது.

கடைசி இரு ஓவர்களில் 19 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் 19-வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், 2-வது பந்தில் சஞ்ஜய் யாதவை (0) வெளியேற்ற, எஞ்சிய 4 பந்துகளையும் பும்ரா வீணடித்தார். இதனால் அந்த ஓவரை மெய்டனாக முடித்தார் புவனேஷ்வர் குமார். இது ஹைதராபாத் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணி போராடிய போதிலும் 15 ரன்களே சேர்க்க முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MNsAxu8

No comments