திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் கூடுதல் நிதி: அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: மத்திய அரசின் பங்களிப்புடன் 15 துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் 41 திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘திட்டங்களின் செயல்பாடுகள், பணிகளை விரைவுபடுத்தி, குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும். திட்ட செயல்பாட்டில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெறும் வகையில் செயல்பட வேண்டும். இத்திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rMhY2nS
via
No comments