பதிவாளர் மீதான பாலியல் புகார் எதிரொலி: பெரியார் பல்கலை.யில் கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பதிவாளர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் தொடர் நடவடிக்கையாக பல்கலைக்கழகத்தில் கூடுதலாக புதிய இடங்கள் கண்டறிந்து சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கூறும்போது, ''பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் (பொறுப்பு) கோபியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 48 மணி நேரத்தில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், பதிவாளர் கோபியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/S0BwPFo
via
No comments