சர்வதேச செஸ் ஒலிம்பியாட் | பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார் - பாதுகாப்பு வளையத்துக்குள் சென்னை மாநகரம்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை சென்னை வருகிறார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ள காவல் துறையினர், ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pxQhcRO
via
No comments