சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கனடா பயணம் - காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார்

சென்னை: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் கனடா செல்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆக.22 முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் பிரதிநிதியாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் நடைபெறும் சொசைட்டி ஆஃப் கிளர்க்ஸ் அட் த டேபிள் (எஸ்ஓசிஏடிடி) கூட்டங்களில் பேரவை செயலர் கி.சீனிவாசன் பங்கேற்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y1074jP
via
No comments