Breaking News

’ஆட்டோகிராஃப் வாங்க பந்தை தூக்கி எறிந்த ரசிகர்’ - சிலிர்க்க வைத்த பாபர் அசாமின் செயல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அஸாமிடம் ஆட்டோகிராஃப் வாங்க ரசிகர் ஒருவர் பந்தை தூக்கி எறிந்த நிலையில் அதற்கு அவர் ரியாக்ட் செய்த விதம் தற்போது வைரல் ஆகியுள்ளது.

உலக பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாபர் அஸாம் 2015 ல் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்தார். கிரிக்கெட் பயணத்தின் ஆரம்பத்தில் சாதாரண வீரராக தெரிந்தவர் அவருடைய பேட்டிங்க் திறமையால் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

image

ஒரு நாள் போட்டிகளில் 17 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்கள் மற்றும் டி20 போட்டிகளில் 1 சதம் என அடித்திருக்கும் பாபர் அஸாம் ஒரு நாள் தொடர்களில் ஒரே தொடரில் 6 சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த ஒரே வீரர் என்னும் சாதனையோடு உள்ளார். ஒடிஐ மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் பாபர் அஸாம் ஒடிஐ யில் கிட்டதட்ட 60 ஆவ்ரேஜ் உடன் உள்ளார்.

மேலும் இந்திய வீரர் விராட் கோலியின் சாதனைகளையெல்லாம் படிப்படியாக நெருங்கி வரும் பாபர் அஸாம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஒடிஐ மற்றும் டி20 யில் முதல் இடத்திலும், டெஸ்ட்டில் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறார்.

image

இந்நிலையில், நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் ரசிகர் ஒருவர் பாபர் அஸாமிடம் ஆட்டோகிராஃப் வாங்க பந்தை துக்கி எறிந்துள்ளார். அந்த பந்து குப்பைத்தொட்டிக்கு அருகில் விழுந்த நிலையில், அதை எடுத்து ஆட்டோகிராஃப் போட குப்பைத்தொட்டிக்குள் விழுந்துவிட்டதோ என குப்பைத்தொட்டிக்குள் தேடி உள்ளார் பாபர். பின்னர் பந்து குப்பைத்தொட்டிக்கு அருகில் விழுந்து இருப்பதை பார்த்த அவர் அதை எடுத்து ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்துள்ளார்.

இதை வீடியோவாக எடுத்திருக்கும் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் பகிர்ந்ததை அடுத்து தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

image

”உலகின் தலைசிறந்த வீரராக இருக்கும் பாபர் வேண்டுமானால் இன்னொரு பந்தை வீசுங்கள் ஆட்டோகிராஃப் போட்டு தருகிறேன் என கூறியிருக்கலாம், நம்பர் 1 பேட்ஸ்மேனிடம் தலைக்கணம் 0 வாக இருக்கிறது “என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Diq2hBf
via

No comments