4,000 பேராசிரியர்கள் விரைவில் நியமனம்: பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்
சென்னை: விரைவில் 4,000 நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் பொன்முடி கூறினார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:உத்திரமேரூர் உறுப்பினர் க.சுந்தர் (திமுக): வாலாஜாபாத் அருகே கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். தற்போது உத்திரமேரூரில் உள்ள கல்லூரியில், தமிழ், ஆங்கிலத்தில் முதுகலை வகுப்புகள், தாவரவியல், விலங்கியலில் இளம் அறிவியல் வகுப்புகள் கூடுதலாக தொடங்க வேண்டும். பொன்னேரி உறுப்பினர் துரை சந்திரசேகர் (காங்கிரஸ்): எனது தொகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். உள்ளிட்ட படிப்புகள் கூடுதலாக தொடங்க வேண்டும். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஒன்றரை ஆண்டுகளில் உயர்கல்வி துறையின் கீழ் 20, அறநிலையத் துறையின் கீழ் 10, கூட்டுறவு துறையின் கீழ் 1 என 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரியே இல்லாத தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு முதல்வர் கூறியுள்ளார். எனவே, நிதிநிலைக்கு ஏற்ப கல்லூரிகள் தொடங்கப்படும். புதிய படிப்புகள் தொடங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது 4,000 நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u69lrTh
via
No comments