தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: சென்னையில் 6 இடங்களில் பேருந்து நிலையங்கள்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பான அறிவிப்பை கடந்த 10-ம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.
அதன்படி, அக்.21 (இன்று), 22, 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து 4,218 சிறப்புப் பேருந்துகள், பிற இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 6,370 பேருந்துகள் என மொத்தம் 10,588 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் சென்னையில் இருந்து பயணிக்க சுமார் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பல்வேறு ஊர்களில் இருந்து பிற ஊர்களுக்கு பயணிக்க 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் முன்பதிவு செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kYrgAbm
via
No comments