Breaking News

ஒப்பந்த வீரர்களில் காயம் ஏற்பட்டு சிகிச்சைபெறாத ஒரே வீரர் இவர்தான்! - BCCI சுவாரஸ்ய தகவல்!

பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களில் கடந்த சீசனில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெறாத வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் விராட் கோலி.

இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரம் வெளியிட்டுள்ள தகவலில், 2021-2022 சீசனில் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களில் ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், ரஹானே உள்ளிட்ட மூத்த, முன்னணி வீரர்கள் 23 பேர் காயம் மற்றும் மற்ற காரணங்களுக்காக பெங்களூரூவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இவர்களை தவிர இந்திய ஏ அணி, 19 வயதுக்குட்பட்ட அணி வீரர்கள் மற்றும் மகளிர் அணி வீராங்கனைகளும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

image

இந்நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரராக உள்ள விராட் கோலி மட்டும் கடந்த சீசனில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெறவில்லை என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. ஃபிட்னசுக்கு விராட் கோலி எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பது இதன்மூலம் தெரியவருதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/sO9mFPo
via

No comments